வலைத்தள மாயையில் கரையும் மழலைப் பருவம்! / Barndommen som viskes ut i sosiale mediers illusjon!📱👧👦
நோர்வேயில் குமுக ஊடகங்களைப் பயன்படுத்த 13 அகவை நிறைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், 9 முதல் 12 அகவைக்குட்பட்ட சிறார்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (54%) நாளும் இணையவழியில் இருக்கிறார்கள்.
இது கடந்த ஆண்டைவிட 38 விழுக்காடு உயர்வாகும். இதனால் சிறார்களின் தூக்கம், கற்றல் திறன், கவனக்குவிப்பு பாதிக்கப்படுவதோடு, இயங்கலைக் குற்றங்களால் பாதிக்கப்படும் இடர்ப்பாடும் இருப்பதாக அமைச்சர் Lene Vågslid எச்சரித்துள்ளார்.
கணினி மற்றும் அலைபேசித் திரைகளே சிறுவர்களின் உலகமாக மாறிவருவதைத் தடுக்க, அரசோடு பெற்றோர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தி வெளியீடு: 19. மே 2026!
📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்
https://www.lydenavnorge.no/p4/nyheter/over-halvparten-er-pa-sosiale-medier/artikkel/999913/