நெகிழி இல்லா நீலக்கடலுக்காய் நோர்வே- நாவலந்தேயக் கூட்டு! / Norsk-indisk samarbeid for et plast fritt blått hav!🌍♻️
நாவலந்தேயத்தில் இருந்து வெளியாகும் நெகிழிக் கழிவுகள் கடலில் கலப்பதைத் தடுக்க நோர்வேயும் நாவலந்தேயமும் புதிய ஒப்பந்தம் செய்துள்ளன.
கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த கூட்டுத்திட்டம், இப்போது 2030-ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளது. சிறிய நாடான நோர்வே, தனது சுற்றுச்சூழல் செயலறிவை நாவலந்தேயத்தின் பசுமை மாற்றத்திற்காகப் பகிர்ந்து கொள்கிறது.
செய்தி வெளியீடு: 19. மே 2026!
📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்
https://www.nrk.no/nyheter/forlenger-miljosamarbeid-med-india-1.17889076