நுகர்வோர் தேவையால் விலை ஏறும் நோர்வேயின் பண்ணைப்பொருட்கள்! / Økt etterspørsel presser opp prisene på norske landbruksprodukter!🥩🥚📈
நோர்வேயில் உள்நாட்டு இறைச்சிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றின் விலையை உயர்த்தப் போவதாக சந்தை ஒழுங்குமுறை அமைப்பான (Nortura) அறிவித்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் மாட்டிறைச்சி 3.8 விழுக்காடும், முட்டை 1 விழுக்காடும் விலை உயர்கிறது. ஏற்கனவே கடந்த ஓராண்டில் குறிப்பிடத்தக்க விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையிலும், மக்கள் இவற்றை வாங்குவது குறையவில்லை எனத் தரவுகள் கூறுகின்றன.
செய்தி வெளியீடு: 19. மே 2026!
📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்
https://www.tv2.no/direkte/jpybz/siste-nytt/6a0ca6fb2777e99462112d8d/nortura-varsler-hoyere-priser-pa-kjott-og-egg