டிரம்ப் அமைதிச் சிறப்பாரம் பெறாவிட்டால் நோர்வேயைத் தண்டிப்பாரா? / Vil Trump straffe Norge hvis han ikke får fredsprisen?🤔
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் பல போர்களை நிறுத்தியதாகக் கூறி, நோர்வேயில் வழங்கப்படும் நோபல் அமைதிச் சிறப்பாரத்துக்குத் தகுதியானவர் என வலியுறுத்தி வருகிறார்.
அவர் வெற்றி பெறாவிட்டால், நோர்வேக்கு எதிராக அரசியல் அழுத்தம் அல்லது கண்டனப் புயலை எழுப்பலாம் என முன்னாள் தூதர்கள் மற்றும் பாதுகாப்பு அறிவுரையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆயினும், நோபல் குழு ஒரு தன்னாட்சி அமைப்பு என்பதால், டிரம்பின் எதிர்வினை இரு நாடுகளுக்குமிடையேயான நட்புறவைப் பாதிக்காது என நோர்வே தலைமை அமைச்சர் Jonas Gahr Støre நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: 09. ஒக்ரோபர் 2025!
தொகுப்பு: கதிர், நோர்வே தமிழ் முற்றம்
https://www.nrk.no/urix/kan-usa-straffe-noreg-om-trump-ikkje-far-fredsprisen_-1.17574346