ஒசுலோவில் மின்சார உந்தோடிகள் குறையுமா? / Vil antallet elsparkesykler i Oslo bli redusert? 🛴
நோர்வே தலைநகரில் மின்சார உந்தோடிகளால் ஏற்படும் திடுநேர்வுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், மாநகராட்சி அதிகாரிகள் Voi, Ryde, Bolt ஆகிய நிறுவனங்களை அழைத்து, அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்துப் பேசவிருக்கிறது.
ஒரு உந்தோடியில் இருவர் செல்வதைத் தடுப்பது, அகவை சரிபார்ப்பு, வேகக் கட்டுப்பாடு போன்ற புதிய விதிமுறைகள் வரலாம்.
செய்தி வெளியீடு: 09. ஒக்ரோபர் 2025!
தொகுப்பு: கதிர், நோர்வே தமிழ் முற்றம்
https://sol.no/nyheter/oslo-kommune-vurderer-faerre-elsparkesykler/83702723